/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய பேரிடர் மீட்பு போட்டி சிறப்பு காவல் அணி முதலிடம்
/
தேசிய பேரிடர் மீட்பு போட்டி சிறப்பு காவல் அணி முதலிடம்
தேசிய பேரிடர் மீட்பு போட்டி சிறப்பு காவல் அணி முதலிடம்
தேசிய பேரிடர் மீட்பு போட்டி சிறப்பு காவல் அணி முதலிடம்
ADDED : நவ 16, 2025 02:09 AM

காஞ்சிபுரம்: தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 13-ம் அணியினர் முதலிடம் பெற்றனர்.
உ.பி., காசியாபாத்தில், தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டி சமீபத்தில் நடந்தது. தமிழகம், ஹிமாச்சல், உத்தரகண்ட், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், மேற்கு வங்கம், ஆந்திரா ஆகிய எட்டு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
தமிழக சிறப்பு காவல் படை- 13வது அணியினர் முதலிடம், உத்தரகண்ட் இரண்டாவது இடம், ஹிமாச்சல் மூன்றாவது இடம் பிடித்தன.
முதலிடம் பெற்ற சிறப்பு காவல் படையினரை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.