/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
/
சாலையோரம் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 16, 2025 01:59 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சித்தி விநாயகர் பூந்தோட்டம் பகுதியில், சாலையோரம் குவியலாக உள்ள குப்பையை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 30வது வார்டு, சித்தி விநாயகர் பூந்தோட்டம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்காததால், அப்பகுதியினர், மாநகராட்சி குப்பை தரம் பிரிக்கும் கூடம் அருகில் கொட்டி வருகின்றனர்.
சாலையோரம் குவியலாக உள்ள குப்பையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, சித்தி விநாயகர் பூந்தோட்டம் பகுதியில் சாலையோரம் உள்ள குப்பை குவியலை அகற்றவும், துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

