/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தம்மனுார் பழங்குடியினர் குடியிருப்பில் கான்கிரீட் சாலை ஏற்படுத்த வலியுறுத்தல்

ADDED : நவ 16, 2025 01:59 AM

வாலாஜாபாத்: தம்மனுாரில், பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில், கான்கிரீட் சாலை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட தம்மனுார் கிராமத்தில், 30 பழங்குடியினர் குடும்பங்கள் உள்ளன.
இவர்களுக்கு அப்பகுதி ஏரியையொட்டி, 2022 - 23ல், மத்திய, மாநில அரசு இணைந்து வழங்கும் இலவச வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன.
எனினும், அக்குடியிருப்பின் தெரு மண் பாதையாக உள்ளது. ஏரி அருகிலான நிலம் களிமண் கொண்டதாக உள்ளதால், மழைக்காலத்தில் தெருப் பகுதி சகதியாக உள்ளது.
தொடர் மழை நேரங்களில் தெரு பாதை சகதியாகி, அப்பகுதி மக்கள் நடந்து செல்வதில் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, தம்மனுாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் குடியிருப்பு தெருவில், கான்கிரீட் சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.