/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால் குளத்திற்கு மழைநீர் செல்வதில் சிக்கல்

ADDED : நவ 16, 2025 01:58 AM

கீழ்கதிர்பூர்: கீழ்கதிர்பூரில், வடிகால்வாயில் செடிகள் வளர்ந்து, துார்ந்துள்ளதால், பொன்னியம்மன் கோவில் குளத்திற்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூர் ஊராட்சியில் பெய்யும் மழைநீர், சாரல் நகர் வழியாக பொன்னியம்மன் கோவில் குளத்திற்கு செல்லும் வடிகால்வாய் உ ள்ளது.
இந்த வடிகால்வாய் முறையாக பராமரிக்காததால், செடிகள் வளர்ந்து, துார்ந்துள்ளது.
இதனால், மழைகாலத்தில், வடிகால்வாய் வாயிலாக பொன்னியம்மன் கோவில் குளத்திற்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.