/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கனரக வாகனங்களால் சாலையோரம் பள்ளம் சீரமைக்க வெங்கடாபுரம் மக்கள் வலியுறுத்தல்

ADDED : நவ 16, 2025 01:57 AM

செவிலிமேடு: காஞ்சிபுரம் வெங்கடாபுரத்தில், கனரக வாகனங்களால், சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை, சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 42வது வார்டு, வெங்கடாபுரம் வழியாக, விப்பேடு, கீழம்பி புறவழிச்சாலைக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, வெங்கடாபுரம்சாலையோரம் உள்ள பள்ளத்தை சீரமைக்க, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.