/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாகர்கோவில், துாத்துக்குடி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்
/
நாகர்கோவில், துாத்துக்குடி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்
நாகர்கோவில், துாத்துக்குடி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்
நாகர்கோவில், துாத்துக்குடி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்
ADDED : அக் 05, 2024 11:03 PM
சென்னை, சென்னையில் இருந்து நாகர்கோவில், துாத்துக்குடி, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கோவையில் இருந்து, இன்று இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு எழும்பூர் வரும். எழும்பூரில் இருந்து நாளை காலை 10:30 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மாலை 6:00 மணிக்கு போத்தனுார் செல்லும்.
சென்ட்ரலில் இருந்து, வரும் 9ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:50 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
நாகர்கோவிலில் இருந்து, 10ம் தேதி இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:25 மணிக்கு சென்ட்ரல் வரும்.
சென்ட்ரலில் இருந்து, 8ம் தேதி இரவு 11:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:50 மணிக்கு துாத்துக்குடி செல்லும். அங்கிருந்து வரும் 9ம் தேதி மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:55 மணிக்கு சென்ட்ரல் வரும்.
இந்த ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.