/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் காஞ்சிபுரத்தில் விமரிசை
/
ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் காஞ்சிபுரத்தில் விமரிசை
ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் காஞ்சிபுரத்தில் விமரிசை
ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் காஞ்சிபுரத்தில் விமரிசை
ADDED : செப் 28, 2024 10:42 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமத் பொய்கையாழ்வார் சபை ராமானுஜ கூடம் உள்ளது. இங்கு ஸ்ரீனிவாச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருக்கல்யாணம் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.
திருக்கல்யாண உற்சவத்தையொட்டி நேற்று, காலை 6:30 மணிக்கு சுப்ரபாதமும், காலை 9:00 மணிக்கு கல்யாண சங்கல்பம் துவங்கியது. பிற்பகல் 12:00 மணிக்கு மாங்கல்யதாரணமும், மதியம் 1:30 மணிக்கு பிரசாத வினியோகமும், தொடர்ந்து ஆஞ்சனநேய உற்வசமும் விமரிசையாக நடந்தது.
மாலை 4:00 மணிக்கு பிரேம்குமார் பாகவதர் மற்றும் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. திருக்கல்யாண உற்வத்திற்கான ஏற்பாட்டை பொய்கையாழ்வார் சபை ராமானுஜ கூடத்தினர் செய்திருந்தனர்.