/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுார் வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
ஸ்ரீபெரும்புதுார் வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ஸ்ரீபெரும்புதுார் வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ஸ்ரீபெரும்புதுார் வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : ஜன 24, 2025 01:23 AM

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் உள்ள நுாலகம் மற்றும் அறிவுசார் மையம், 1.40 கோடி ரூபாய் மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் உள்ளிட்டவை, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி, கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்ணம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 32.8 லட்சம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட தொடக்கப் பள்ளி கட்டடத்தை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவகம், பயணியர் நிழற்குடை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு தரமான வீடுகளை கட்டித்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

