/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுார் சாலை படுமோசம்
/
ஸ்ரீபெரும்புதுார் சாலை படுமோசம்
ADDED : டிச 29, 2024 10:40 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் காந்தி சாலை, தேரடி சாலை, திருவள்ளூர் சாலை, பேருந்து நிலைய சாலைகளை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையின் பல இடங்களில் சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. லேசாக மழை பெய்தாலே, சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.