/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தத்தனுார் குடியிருப்பு அருகே தேங்கும் மழைநீரால் விஷ ஜந்து பீதி
/
தத்தனுார் குடியிருப்பு அருகே தேங்கும் மழைநீரால் விஷ ஜந்து பீதி
தத்தனுார் குடியிருப்பு அருகே தேங்கும் மழைநீரால் விஷ ஜந்து பீதி
தத்தனுார் குடியிருப்பு அருகே தேங்கும் மழைநீரால் விஷ ஜந்து பீதி
ADDED : ஜூலை 22, 2025 12:57 AM

ஸ்ரீபெரும்புதுார் தத்தனுார் ஊராட்சியில் மழைநீர் வடிகால்வாய் இல்லாததால், குடியிருப்பு அருகே தேங்கும் மழைநீரால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்து நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், தத்தனுார் ஊராட்சிக்குட்பட்ட, வளத்தாஞ்சேரி கல்மேட்டு நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப் பகுதியில் உள்ள, பெரும்பாலான உட்புற சாலையோரம் வடிகால் வசதி ஏற்படுத்தவில்லை.
இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகே உள்ள காலி மனைகளில் தேங்கி வருகிறது.
அதேபோல, மழை காலங்களில் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேற வழியின்றி, குடியிருப்புகள் அருகே குளம் போல தேங்கி நிற்கிறது.
பல நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், அருகே உள்ள வீடுகளுக்குள் படை எடுத்து வருகின்றன.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
எனவே, குடியிருப்பு அருகே தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தி, மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

