/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கும் நீரால் சுகாதார சீர்கேடு
/
சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கும் நீரால் சுகாதார சீர்கேடு
சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கும் நீரால் சுகாதார சீர்கேடு
சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கும் நீரால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜன 24, 2025 01:17 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சி, கரும்பாக்கம் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த துணை சுகாதார நிலையத்திற்கு, சுற்றுப்புற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்போர் வந்து செல்கின்றனர்.
இங்கு, காய்ச்சல், கர்ப்பிணியர் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை, பொது மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு துணை சுகாதார நிலையத்தின் அருகே, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் செல்கிறது.
நீண்ட நாட்களாக இந்த பைப்லைனில் விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் துணை சுகாதார நிலைய வளாகத்தில் குளம்போல் தேங்கியுள்ளது. நீண்ட நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், நோய் பரப்பும் கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, துணை சுகாதார நிலைய வளாகத்தில், சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க, உடைந்த குழாய் விரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

