/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநில பால் பேட்மின்டன் திருவொற்றியூரில் துவக்கம்
/
மாநில பால் பேட்மின்டன் திருவொற்றியூரில் துவக்கம்
ADDED : பிப் 17, 2024 11:44 PM

திருவொற்றியூர், வேதமாணிக்கம் நினைவு சுழற்கோப்பை, மாநில அளவிலான ஆண்கள் பால் பேட்மின்டன் போட்டிகள், திருவொற்றியூர் நகராட்சி பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கி, இன்று மாலை வரை நடக்கின்றன.
திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் நடக்கும் போட்டியில், மதுரை, திண்டுக்கல், கோவை, கடலுார் போன்ற மாவட்டங்களில் இருந்து, 40 அணிகளைச் சேர்ந்த, 80 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி, 18 - 45 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்குபெறும் பால் பேட்மின்டன் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, முதல் பரிசாக, 12,000 ரூபாய், சான்றிதழ், சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது.
முறையே, அடுத்தடுத்த இடங்களை பிடிக்கும் அணிக்கு, 10,000, 8,000, 6,000, 5,000 ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழக மாநில செயலர் எழிலரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.