மாநில அளவிலான சிலம்பம் போட்டி :காஞ்சி மாணவ - மாணவியர் சிறப்பிடம்
மாநில அளவிலான சிலம்பம் போட்டி :காஞ்சி மாணவ - மாணவியர் சிறப்பிடம்
ADDED : பிப் 03, 2026 05:19 AM

காஞ்சிபுரம்: கோவையில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாருதி பாரம்பரிய சிலம்ப அகாடமி மாணவ - மாணவியர் 24 தங்கம் உட்பட 90 பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றனர்.
தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலை கழகத்தின் சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி கோவை பார்க் இன் ஜினியரிங் கல்லுரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்ற, மாருதி பாரம்பரிய சிலம்பம் அகாடமியைச் சேர்ந்த 54 மாணவ - மாணவியர் தனித்திறமை, இரட்டை கொம்பு, வாள் வீச்சு, மான் கொம்பு, தொடுமுறை உள்ளிட்ட பிரிவு போட்டிகளில் பங்கேற்று, 24 தங்கம், 41 வெள்ளி, 25 வெண்கலம் என, 90 பதக்கங்களை குவித்து சிறப்பிடம் பெற்று, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் மூத்த சிலம்ப ஆசிரியர் பூங்காவனம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
