/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநில வாலிபால் எஸ்.ஆர்.எம்., தங்கம்
/
மாநில வாலிபால் எஸ்.ஆர்.எம்., தங்கம்
ADDED : பிப் 17, 2024 11:47 PM

சென்னை, ராணி மேரி கல்லுாரி சார்பில், மாநில அளவிலான வாலிபால் போட்டி, சென்னையில் உள்ள கல்லுாரி வளாகத்தில், கடந்த ஐந்து நாட்கள் நடந்தது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
போட்டிகள், 'லீக் முறையில் நடத்தப்பட்டன. முதல் லீக் சுற்றில், எஸ்.ஆர்.எம்., மற்றும் ராணி மேரி அணிகள் மோதின. அதில், 25 - 20, 25 - 19 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்றது.
மற்ற போட்டிகளில், எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 20, 25 - 9 என்ற கணக்கில் வேல்ஸ் அணியையும், 25 - 20, 25 - 15 என்ற கணக்கில் மதுரை அமெரிக்கன் கல்லுாரியையும் தோற்கடித்தது.
அனைத்து லீக் போட்டிகள் முடிவில், எஸ்.ஆர்.எம்., அணி முதலிடத்தையும், வேல்ஸ் இரண்டாம் இடத்தையும், பி.கே.ஆர்., மற்றும் ராணிமேரி அணிகள் முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களையும் பிடித்தன.