/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குண்ணம் அரசு பள்ளியில் ' ‛ஸ்டெம் லேப்' திறப்பு
/
குண்ணம் அரசு பள்ளியில் ' ‛ஸ்டெம் லேப்' திறப்பு
ADDED : அக் 15, 2025 09:42 PM
ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, குண்ணம் அரசு பள்ளியில், தனியார் நிறுவனத்தின் பங்களிப்பில், 'ஸ்டெம் லேப்' திறக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் தொடர்பாக கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள 'ஹூண்டாய் மொபிஸ்' எனும் தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியில் 'ஸ்டெம் லேப்' நேற்று திறக்கப்பட்டது.
'ஹூண்டாய் மொபிஸ்' நிறுவனத்தின் துணை பொது மாநில மேலாளர் ஹு மின் ஹோ ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
இதன் வாயிலாக மாணவ - மாணவியரின் படைப்பாற்றல், சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் குழுப்பணி ஆகியவற்றை மேம்படுத்த உதவும்.
இந்த ஆய்வகத்தில், பொருட்கள் சேமிப்பகம், எளிய ரோபோடிக்ஸ் கருவிகள், மின்னணு பாகங்கள் கட்டுமான தொகுப்புகள், 3டி பிரிண்டிங் இயந்திரம், மடிக்கணினி போன்றவை உள்ளன. அரசு பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.