/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ் மாணவர்கள் அவதி
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ் மாணவர்கள் அவதி
ADDED : அக் 19, 2024 07:28 PM
ஆரியபெரும்பாக்கம்:காஞ்சிபுரம் அடுத்த, சிறுணைபெருகல் கிராமத்தில் இருந்து, ஆரியபெரும்பாக்கம், சமத்துவபுரம், துலங்கும் தண்டலம், திம்மசமுத்திரம் வழியாக காஞ்சிபுரம் அரசு பேருந்து டி-10 பேருந்து இயக்கப்பட்டது.
இந்த பேருந்து, தினசரி காலையில் சிறுணை பெருகல் கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, ஏனாத்துார் வழியாக, சூரமேணிகுப்பம் வரையில் என, மூன்று நடைகள் இயங்கப்பட்டன.
தனியார் சிறிய பேருந்து சேவை துவக்கம் மற்றும் கொரோனாவிற்கு பின், அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால், ஆரியபெரும்பாக்கம், துலங்கும் தண்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் பேருந்து வசதியின்றி ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் என, பல்வேறு வாகனங்களில் செல்ல வேண்டி உள்ளது.
எனவே, அரசு நிறுத்தப்பட்ட டி-10 பேருந்து சேவை மீண்டும் துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, ஆரியபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமார் கூறுகையில், ‛கிராமப்புற பேருந்து வசதி இல்லாததால், கிராமத்தினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் சிரமத்துடன் காஞ்சிரபுரத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இதை தவிக்க, காலை, மாலை பள்ளி துவங்கும் நேரத்தில் அரசு பேருந்து சேவை மீண்டும் துவக்க வேண்டும்' என்றார்.