/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கட்டவாக்கத்தில் பகலில் ஒளிரும் தெரு விளக்குகள்
/
கட்டவாக்கத்தில் பகலில் ஒளிரும் தெரு விளக்குகள்
ADDED : நவ 27, 2024 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது கட்டவாக்கம் ஊராட்சி. இக்கிராம சாலை பகுதிகளில், குடியிருப்புவாசிகளுக்கு பயன்பாடாக மின்கம்பங்களில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரவு நேரங்களை தொடர்ந்து இத்தெரு விளக்குகளை அணைக்காததால், பகல் நேரங்களிலும் மின் விளக்குகள் தொடர்ந்து ஒளிர்கின்றன.
இதனால், மின்சாரம் வீணாவதோடு மின்விளக்குகளும் குறுகிய காலத்தில் பழுதடையும் நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் தெரு விளக்குகளை முறையாக பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.