/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நத்தப்பேட்டை வளைவில் வேகத்தடைகள் அமைப்பு
/
நத்தப்பேட்டை வளைவில் வேகத்தடைகள் அமைப்பு
ADDED : ஜன 17, 2024 10:19 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை கிராமத்தில் இருந்து, நத்தப்பேட்டை, களியனுார், வையாவூர், கரூர் ஆகிய கிராமங்களின் வழியாக, ராஜகுளம் வரை புறவழிச் சாலை உள்ளது.
இதில், நத்தப்பேட்டை, களியனுார், வையாவூர், கரூர் ஆகிய முக்கிய இடங்களில், சந்திப்பு சாலைகள் இணைகின்றன. இங்கு, வேகத்தடை அமைத்தால், பயனுள்ளதாக இருக்கும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறையினர் நத்தப்பேட்டை பிரதான வளைவில், வேகத்தடை அமைத்து உள்ளனர்.
அதன் மீது கண்துடைப்பிற்கு, வெள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு இரவிலும் எளிதாக தெரியும் வகையில், வெள்ளை நிற வர்ணக் கோடுகள் போட வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.