/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சர்ச்சுக்கு பங்கு தந்தை நியமிக்க போராட்டம்
/
சர்ச்சுக்கு பங்கு தந்தை நியமிக்க போராட்டம்
ADDED : ஏப் 07, 2025 02:19 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஆர்.என்.கண்டிகை கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 1989ம் ஆண்டு கட்டப்பட்ட சர்ச் உள்ளது. இந்நிலையில், 27 ஆண்டுகளாக சர்ச், பங்கு தந்தை இல்லாமல் உள்ளது.
இதனால், தினந்தோறும் நடக்கும் பூஜைகள் சரிவர நடத்தப்படாமல் உள்ளது. மேலும், பங்கு தந்தையால் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் திருமண சான்றிதழ், இறுதி சடங்கு சான்றிதழ், பள்ளி மாணவர்கள் சலுகைகள் பெற சான்றிதழ் ஆகியவை பெறுவதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.
கடந்த 27 ஆண்டுகளாக பங்கு தந்தையை நியமிக்காமல் இருக்கும், செங்கல்பட்டு மறை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, கிராமத்தினர், சர்ச்சில் இருந்து முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்து ஊர்வலமாக வந்து, வயலூர் கூட்டுசாலை பகுதியில் அமர்ந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

