ADDED : அக் 22, 2024 07:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பி.இ., இரண்டாம் ஆண்டு மாணவி கேத்தரின், 19, லிஸ்வந்தி, 19. நண்பர்களான இருவரும், நேற்று, இ.சி.ஆரில் இருந்து, ஓ.எம்.ஆர்., நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். கேத்தரின், வாகனத்தை ஓட்டினார்.
கே.கே., சாலை, பகிங்ஹாம் கால்வாய் பாலத்தில் செல்லும்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்திற்கு வழிவிட்டு, சற்று வலது பக்கமாக வாகனத்தை கேத்தரின் திருப்பினார். அப்போது, பின்னால் வந்த கழிவுநீர் லாரி, வாகனத்தின் மீது மோதியது. இதில் கேத்தரின் சம்பவ இடத்திலே பலியானார். பலத்த காயமடைந்த லிஸ்வந்தி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், லாரி ஓட்டுனரை தேடுகின்றனர்.