/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புறநகர் பஸ் நிலைய பணி செங்கையில் துவக்கம்
/
புறநகர் பஸ் நிலைய பணி செங்கையில் துவக்கம்
ADDED : ஜன 05, 2024 11:20 PM

செங்கல்பட்டில் புதிய புறநகர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனை அமைக்க ஆலப்பாக்கம் ஊராட்சி, மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான 9.95 ஏக்கர் நிலம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கட்டுமான பணிகளுக்காக 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, கடந்த நவ., 15ம் தேதி காணொலி காட்சி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், துவக்கி வைத்தார்.
இதில், கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, வனக்குழு தலைவர் திருமலை, ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி, ஆலப்பாக்கம் ஊராட்சி தலைவர் பரிமளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.