/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராமானுஜர் கோவிலில் சூரிய வழிபாடு பூஜை
/
ராமானுஜர் கோவிலில் சூரிய வழிபாடு பூஜை
ADDED : ஆக 10, 2025 01:08 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில் சூரிய வழிபாடு பூஜை நிறைவு பெற்றது.
காஞ்சிபுரம் செவிலிமேடில் உள்ள சாலை கிணறு ராமானுஜர் சன்னிதியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ஆறு நாட்களும், ஆடி மாதத்தில் நான்கு நாட்களும் கருவறையில் உள்ள ராமானுஜர் மீது, சூரிய ஒளி விழும்போது, சூரிய வழிபாடு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டு ஆடி மாதத்திற்கான சூரிய பூஜை, கடந்த 6ம் தேதி துவங்கியது. மூன்று நாட்களாக காலை 7:00 மணியளிவ், சூரிய ஒளி ராமானுஜர் மீது விழும்போது சூரிய வழிபாடு பூஜை நடந்தது.
நிறைவு நாளான நேற்று, காலை 7:05 மணிக்கு சூரிய ஒளி, கருவறையில் உள்ள ராமானுஜர் மீது விழுந்தது. தொடர்ந்து சூரிய பூஜை நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சூரிய பகவானையும், ராமானுஜரையும் வழிபட்டனர்.