/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூட்டுறவு பட்டயப்பயிற்சி பழைய பாடங்களுக்கு துணை தேர்வு
/
கூட்டுறவு பட்டயப்பயிற்சி பழைய பாடங்களுக்கு துணை தேர்வு
கூட்டுறவு பட்டயப்பயிற்சி பழைய பாடங்களுக்கு துணை தேர்வு
கூட்டுறவு பட்டயப்பயிற்சி பழைய பாடங்களுக்கு துணை தேர்வு
ADDED : ஆக 18, 2025 12:51 AM
காஞ்சிபுரம்:கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில், பழைய பாட திட்டத்திற்கு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில், 2002ம் ஆண்டு முதல், 2021ம் ஆண்டு வரை முழு நேரம் மற்றும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப் பயிற்சி நடந்தது. புதிய பாட திட்டம் துவங்கி, இரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருப்பதால், பழைய பாட திட்டங்கள் முடிவு கட்டப்பட உள்ளது.
இதனால், பழைய பாட திட்டத்தின்படி தேர்ச்சி பெறாதவர்களுக்கு, செப்., 8ம் தேதி முதல், செப்.,12ம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, பழைய பாட திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு, இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ; பத்தாம் வகுப்பு; பிளஸ் 2 மதிப்பெண் நகல்; இறுதி தேர்வு எழுதிய நுழைவுச்சீட்டு நகல்; தேர்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணத் தொகையுடன் ஆக.,24ம் தேதி வரையில், கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

