/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டேபிள் டென்னிஸ் சென்னை வீரர் சாம்பியன்
/
டேபிள் டென்னிஸ் சென்னை வீரர் சாம்பியன்
ADDED : நவ 28, 2025 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த மிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், நான்காவது மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி, இம்மாதம் 22 மற்றும் 23ம் தேதிகளில், பெரம்பூரில் நடந்தது. 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதன் இறுதி போட்டியில் மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த எத்திராஜன், 57, மத்திய சென்னையைச் சேர்ந்த சுமித் சங்வி, 56, என்பவரை 3 - 2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, சாம்பியன் கோப்பையை வென்றார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக, சென்னை வீரர் எத்திராஜன், சாம்பியன் கோப்பையை வென்றுள்ளார்.

