/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாழையம்பட்டு தரைப்பாலம் பணி நிறைவு வாகன போக்குவரத்து துவக்கம்
/
தாழையம்பட்டு தரைப்பாலம் பணி நிறைவு வாகன போக்குவரத்து துவக்கம்
தாழையம்பட்டு தரைப்பாலம் பணி நிறைவு வாகன போக்குவரத்து துவக்கம்
தாழையம்பட்டு தரைப்பாலம் பணி நிறைவு வாகன போக்குவரத்து துவக்கம்
ADDED : மார் 19, 2024 03:49 AM

காஞ்சிபுரம் : வாலாஜாபாதில் இருந்து, ஒரகடம் வரையில், 15 கி.மீ., நீளம் நான்குவழிச் சாலை உள்ளது.
இந்த சாலையை, ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்துவதற்கு நெடுஞ்சாலை துறை முன் வந்தது.
அதன்படி, தமிழ்நாடு சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மூலமாக, 175 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடந்த 2018ம் ஆண்டு நான்குவழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி துவக்கப்பட்டது.
இந்த சாலை விரிவாக்க பணிகள், இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என, தமிழ்நாடு சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் முடிவு செய்து இருந்தது.
ஒரகடம் முதல், குண்ணவாக்கம் வரையில், 6 கி.மீ., துாரம் நான்குவழிச் சாலை, ஆறுவழிச் சாலையாகவும். தேவரியம்பாக்கம் முதல், வாலாஜாபாத் வரையில், 6 கி.மீ., துாரம் இரண்டாவது கட்டமாக, ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதில், தேவரியம்பாக்கம், தாழையம்பட்டு இடையே, அபாயகரமான வளைவுகளை, நேர்படுத்துவதற்கு தனியாருக்கு சொந்தமான நிலம், கையகப்படுத்தி, மரங்கள் அகற்றப்படாமல் இருந்தன.
இதனால், தேவரியம்பாக்கம் மற்றும் தாழையம்பட்டு ஆகிய பகுதிகளில், அடிக்கடி வாகன விபத்துகள் நடந்த வந்தன. மேலும், வட கிழக்கு பருவ மழையால், தாழையம்பட்டு அபாயகரமான வளைவில், பல்லாங்குழியாக சாலை மாறியதால், கூடுதல் வாகன விபத்துகள் ஏற்பட காரணமாக அமைந்துவிட்டது.
கடந்த ஆண்டு, தேவரியம்பாக்கம், தாழையம்பட்டு கிராமங்களின் இடையே சாலை விரிவுபடுத்தும் பணிக்கு, நிலம் கையகப்படுத்தி சமீபத்தில் தரைப்பாலம் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிப்பால், தரைப்பாலம் யாரும் திறக்கவில்லை. இருப்பினும், நேற்று வாகன பயன்பாட்டிற்கு, தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

