/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தோல் தொழிற்சாலை அதிகாரி வீட்டில் ஐ.டி., சோதனை
/
தோல் தொழிற்சாலை அதிகாரி வீட்டில் ஐ.டி., சோதனை
ADDED : பிப் 04, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : வேளச்சேரி, அண்ணாதெருவை சேர்ந்தவர் மனோகரன், 50. ராணிப்பேட்டையில் உள்ள 'கைடுசைன்' என்ற தோல் தொழிற்சாலையில், மேலாளராக பணி புரிகிறார்.
நேற்றுமுன்தினம் மதியம் முதல் இரவு வரை, இவரது வீட்டில் வருமானவரி புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர். இவரது வங்கி கணக்கில், வருமானத்திற்கும் அதிகமான பணப்புழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், இவர், குடும்பத்தாரின் வங்கி கணக்குகள், சொத்து, நகை, பணம் குறித்து விசாரித்துள்ளனர். இதில், சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
இதை வைத்து, வேறு சிலரிடமும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிய வருகிறது.