/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இலக்கு...அதிகரிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 560 ஆக உயர்வு
/
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இலக்கு...அதிகரிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 560 ஆக உயர்வு
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இலக்கு...அதிகரிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 560 ஆக உயர்வு
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இலக்கு...அதிகரிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 560 ஆக உயர்வு
ADDED : ஏப் 20, 2025 07:54 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு இலக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, பயனாளிகள் எண்ணிக்கை 560 பேராக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், 7,152 பேர்களுக்கு வீடு தேவைப்படும் கணக்கெடுப்பு வாயிலாக தெரிய வந்துள்ளன. இது போன்ற நபர்களுக்கு, 'ஆவாஸ் பிளஸ்' திட்டம் என, அழைக்கப்படும் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்படுகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2024 - -25ம் நிதி ஆண்டில், 550 பேர்களுக்கு வீடு கட்ட தேர்வு செய்து, வீடு கட்டும் ஆணையை ஊரக வளர்ச்சி துறை வழங்கி உள்ளது.
இந்த வீடு கட்டும் பயனாளிகளும், மத்திய அரசு 1.20 லட்சம் ரூபாய், மாநில அரசு 1.20 லட்சம் ரூபாய் என, மொத்தம், 2.40 லட்சம் ரூபாய் செலவில், கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொள்ளலாம்.
இதுதவிர, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு, 100 நாள் வேலை செய்து கொள்ளலாம் என, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் தேர்வாகி வீடு கட்ட முடியாத சிலர், வீடு கட்டவே முடியாது என, எழுத்து மற்றும் வாய்மொழி உத்தரவு வாயிலாக தெரிவித்து உள்ளனர்.
அதன்படி தமிழகத்தில், திருவள்ளூர், வேலுார், மதுரை, துாத்துக்குடி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த இலக்கில், 169 வீடுகள் கட்ட முடியாது என, மாநில ஊரக வளர்ச்சி துறையினரிடம் அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர், வீடு கட்டும் ஆணையை ரத்து செய்து ஒப்படைத்துள்ளனர்.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளின் எண்ணிக்கை மட்டும் 120 பேர்களாக உள்ளனர். மீதம் இருக்கும் எட்டு மாவட்டங்களில் 12 பேர்களுக்கும் குறைவாக உள்ளனர்.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் ரத்து செய்ய பயனாளிகளின் எண்ணிக்கையை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப வீடு கட்டும் நபர்களின் எண்ணிக்கை பிரித்தளிக்கப்பட்டு உள்ளது.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 550 பேர்கள் ஏற்கனவே இலக்கு நிர்ணயம் செய்து, வீடு கட்டும் ஆணை வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் ரத்து செய்து வழங்கிய வீடுகளில், 10 வீடுகள் கூடுதலாக சேர்ந்து, 560 பேர்களுக்கு, புதிய இலக்காக நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட 120 பயனாளிகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர்களுக்கு வீடு கட்ட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 550 பேர்களுக்கு, 'ஆவாஸ்' திட்டத்தில் வீடு கட்டும் பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளன. பணி ஆணை பெற்றவர்கள் வீடு கட்டும் பணியை துவக்கி உள்ளனர்.
தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் ரத்து செய்த வீடுகளில், பத்து நபர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. எந்த ஒன்றியத்திற்கு தேவைப்படுகிறது என, அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.