/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் தார்ச்சாலைகள் புதுப்பிக்கும் பணி
/
உத்திரமேரூரில் தார்ச்சாலைகள் புதுப்பிக்கும் பணி
ADDED : ஜூன் 29, 2025 12:10 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 95 லட்சம் ரூபாய் செலவில் தார்ச்சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, சோமநாதபுரம், நீரடி, பிரபு அவென்யூ ஆகிய பகுதியில், 20 ஆண்டுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
இச்சாலைகள் வாகன போக்குவரத்து நிறைந்து இருந்ததால், அவைகள் சேதமடைந்து இருந்தன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
எனவே, சேதமடைந்த தார்ச்சாலைகளை புதுப்பிக்க, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், சிறப்பு நிதி திட்டத்தின் கீழ், 95 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது, சேதமடைந்த தார்ச்சாலைகளை புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறியதாவது:
உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, நீரடி, சோமநாதபுரம், பிரபு அவென்யூ ஆகிய இடங்களில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, தார்ச்சாலை இன்னும் இரண்டு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.