/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
/
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
ADDED : பிப் 04, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், மகன் சரவணன், 32. நேற்று முன்தினம், இரவு 11:30 மணி அளவில், செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடத்தை கடந்து உள்ளார்.
அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து, திருமால்பூர் நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே சரவணன் இறந்தார்.
செங்கல்பட்டு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.