ADDED : நவ 13, 2024 07:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே, போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கீழ்கதிர்பூர் கிராமத்தில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 27 மற்றும் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினகரன், 18. ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து, 40,000 ரூபாய் மதிப்பிலான, 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.