/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் அவதி
/
தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் அவதி
ADDED : ஜூலை 24, 2025 10:03 PM
காஞ்சிபுரம்:பத்திரப்பதிவு துறையில் தற்காலிகமாக பணியாற்றும் பணியாளர்களுக்கு, மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தின்கீழ், காஞ்சிபுரத்தில் மூன்று சார் - பதிவாளர் அலுவலகங்களும், வாலாஜாபாத் மற்றும் தாமல் ஆகிய பகுதிகளில் இரு சார் - பதிவாளர் அலுவலகங்கள் என, 5 பதிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த அலுவலகங்களில், தனியார் நிறுவனம் வாயிலாக, தலா மூன்று பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு, தனியார் நிறுவனம் வாயிலாகவே மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மூன்று மாதங்களாக தற்காலிக பணியாளர்களுக்கு, சம்பளம் வழங்கப்படவில்லை என, தற்காலிக பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.
சம்பள பாக்கியை விரைவாக வழங்க வேண்டும் என, தற்காலிக பணியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.