/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிழற்குடை வசதி இல்லாத தென்னேரி பஸ் நிறுத்தம்
/
நிழற்குடை வசதி இல்லாத தென்னேரி பஸ் நிறுத்தம்
ADDED : ஜன 11, 2025 11:19 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், தென்னேரி கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தென்னேரி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து வாயிலாக வாலாஜாபாத், காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர், மழை மற்றும் வெயில் நேரங்களில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, தென்னேரி பேருந்து நிறுத்தத்தில், புதிதாக பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

