/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடைநிலை ஆசிரியர்களுக்கான 'டெட்' தேர்வு: 315 பேர் 'ஆப்சன்ட்'
/
இடைநிலை ஆசிரியர்களுக்கான 'டெட்' தேர்வு: 315 பேர் 'ஆப்சன்ட்'
இடைநிலை ஆசிரியர்களுக்கான 'டெட்' தேர்வு: 315 பேர் 'ஆப்சன்ட்'
இடைநிலை ஆசிரியர்களுக்கான 'டெட்' தேர்வு: 315 பேர் 'ஆப்சன்ட்'
ADDED : நவ 15, 2025 11:28 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏழு மையங்களில் நேற்று நடந்த, 'டெட்' தேர்வில், இடைநிலை ஆசிரியர்கள் 315 பேர் ஆப்சன்ட் ஆகினர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், 'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல லட்சம் பேர், 'டெட்' தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இந்நிலையில், நவ.,15, 16ம் தேதிகளில், 'டெட்' தேர்வுகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை எழுத, இடைநிலை ஆசிரியர்கள், 1 லட்சத்து, 7,370 பேர், பட்டதாரி ஆசிரியர்கள், 3 லட்சத்து, 73,438 பேர் என, மொத்தம், 4 லட்சத்து, 80,808 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த, இடைநிலை ஆசிரியர்களுக்கான, 'டெட்' தேர்வுக்கு, 2,161 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஏழு மையங்களில் நேற்று நடந்த, 'டெட்'தேர்வில், 315 பேர் ஆப்சன்ட் ஆகினர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான, 'டெட்' தேர் வு இன்று, 20 மையங்களில் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்காக, 5,681 பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி தெரிவித்துஉள்ளார்.

