/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா துவக்கம்
/
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா துவக்கம்
ADDED : பிப் 03, 2025 01:38 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா பெருநகர் கிராமத்தில், பட்டுவதனாம்பிக்கை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் 14 நாட்கள் தைப்பூச திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டுக்கான தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
முன்னதாக, காலை 7:00 கொடிமரத்தின் முன், பட்டுவதனாம்பிக்கை அம்பாள் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து, விழா நாட்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, நாக வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், கைலாச பீட வாகனம் ஆகியவற்றில், அமர்ந்தவாறு உற்சவர் வீதியுலா நடக்கவுள்ளது.
வரும் -8ல் தேர்த் திருவிழா நடக்கிறது. வரும் 11ல் செய்யாற்றில் 23 கிராம தெய்வங்கள் வந்து, பிரம்மபுரீஸ்வரருடன் சேர்ந்து மகோன்னதக் காட்சியளிக்க உள்ளனர்.