/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடு அம்மனுக்கு வரும் 17ல் ஆடி திருவிழா
/
செவிலிமேடு அம்மனுக்கு வரும் 17ல் ஆடி திருவிழா
ADDED : ஜூலை 13, 2025 10:19 PM
செவிலிமேடு:செவிலிமேடு அங்காள பரமேஸ்வரி மற்றும் பத்ரகாளியம்மன் கோவிலில் வரும் 17ம் தேதி ஆடி திருவிழா நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு, எம்பெருமான் கோவில் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி, பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான விழா, வரும் 17ம் தேதி, காலை 7:30 மணிக்கு வேள்வி பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து காலை 8:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு கூழ்வார்த்தலும் நடத்தப்படுகிறது.
மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள், முத்துமாரியமமன் கோவிலில் இருந்து அக்னி சட்டி எடுக்கும் நிகழ்வு நடக்கிறது.
இரவு 8:00 மணிக்கு கும்பம் படையலும், 9:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை உத்சவமும், இரவு 10:00 மணிக்கு பட்டறை பெரும்புதுார் பொன்னியம்மன் நாடகம் மன்றத்தினரின் நாடகமும் நடக்கிறது.

