/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மொபைல் டவர் மீது போராட்டம் நடத்தியவர் குடும்பத்துடன் கைது இரு தரப்பு மோதலில் தொடரும் பிரச்னை

ADDED : நவ 04, 2024 03:55 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 29. இவருக்கும், முத்துவேடு கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளுடன், கடந்த மாதம் 30ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது.
இப்பிரச்னை தொடர்பாக முத்துவேடு கிராமத்தில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். அப்போது, அங்கிருந்த விக்கி, அபிஷேக், பிரசன்னா, அசோக், ஆபாவாணன் ஆகியோர் சேர்ந்து, பெருமாளை தலையில் வெட்டியுள்ளனர். பெருமாள், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பெருமாளை வெட்டியது தொடர்பாக அபிஷேக், 23, விக்கி என்கிற விக்னேஷ், 27, பிரசன்னா, 29, ஆகிய மூன்று பேரையும் ஏற்கனவே கைது செய்தனர். இவ்வழக்கில் அசோக், ஆபாவாணன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
மருத்துவனையில் சிகிச்சையில் இருந்த பெருமாள், காஞ்சிபுரத்தில் உள்ள மொபைல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்ய கோரினார். போலீசார் அவரை சமாதானம் செய்து கீழே இறக்கினர்.
எதிர்தரப்பில் உள்ள அபிஷேக், தன்னை பெருமாள் குடும்பம் தாக்கியதாக கொடுத்த புகாரின்படி பெருமாள், வெங்கடேசன், அன்னக்கிளி, தெய்வானை ஆகிய நான்கு பேரையும், நேற்று போலீசார் கைது செய்தனர்.