/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோழியை துரத்திய சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
/
கோழியை துரத்திய சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
கோழியை துரத்திய சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
கோழியை துரத்திய சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
ADDED : பிப் 19, 2025 06:19 PM
குன்றத்துார்:குன்றத்துாரை அடுத்த நந்தம்பாக்கத்தில், தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில், கோபால் என்பவர் குடும்பத்தினருடன் தங்கி, தோட்டத்தை பராமரிக்கும் வேலை செய்து வருகிறார்.
அவரது மகன் சந்தோஷ்குமார், 14, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கோபாலுக்கு கை, கால் செயலிழந்து விட்டதால், படுத்த படுக்கையாக உள்ளார். தோட்டத்தில் திறந்த வெளியில் பெரிய கிணறு ஒன்று உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை, பள்ளிக்கு செல்ல தயாரான சந்தோஷ்குமார், கிணற்றின் மீது நின்ற கோழியை துரத்த முயன்றார். அப்போது, கால் தவறி கிணற்றில் விழுந்தார்.
இதைபார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், சந்தோஷ்குமாரை மீட்க முயன்றனர். முடியாததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இருங்காட்டுக்கோட்டையில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரில் மூழ்கி இறந்த, சந்தோஷ்குமாரின் உடலை மீட்டனர். உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

