/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் செயல்பாட்டு முறை குறித்து கேட்ட கலெக்டர்
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் செயல்பாட்டு முறை குறித்து கேட்ட கலெக்டர்
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் செயல்பாட்டு முறை குறித்து கேட்ட கலெக்டர்
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் செயல்பாட்டு முறை குறித்து கேட்ட கலெக்டர்
ADDED : மே 16, 2025 02:35 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்தில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' சிறப்பு திட்ட முகாம் நடந்தது.
இம்முகாமில், அனைத்து துறை சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்று வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளின் செயல்பாடுகள் குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து வாரணவாசி ஊராட்சியில் நுாறு நாள் வேலை நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று, தொழிலாளர்களிடத்தில் பணிகளின் பயன்பாடு போன்றவை குறித்து கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து, வாரணவாசியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியின் கீழ், 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் ஊராட்சி அலுவலக கட்டடப் பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
அந்த ஊராட்சிக்கு உட்பட்ட ராமாஞ்சிபுரம் குளம் முதல், தாழம்பட்டு ஏரி மதகு வரை மேற்கொள்ளப்படும் நீர்வரத்து கால்வாய் பணிகளையும், தொடர்ந்து, தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் 5.50 லட்சம் ரூபாய் செலவிலான பிளாஸ்டிக் அரவை இயந்திரத்தை பார்வையிட்டு அதன் செயல்பாட்டு முறை குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, தேவேரியம்பாக்கத்தில் பழங்குடியினரின் ஆறு குடும்பங்களுக்கு, தலா 4.80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் அரசு விலையில்லா வீடுகள் கட்டுமானப் பணிகளின் தரத்தை சோதித்தார்.
அதை தொடர்ந்து, முத்தியால்பேட்டை ஊராட்சியில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கினார்.
மாலையில், வாலாஜாபாத் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து, வாலாஜாபாத் வேளாண் விரிவாக்க மையம் சென்று அங்கு இருப்பு உள்ள வேளாண் இடுப்பொருட்களை பார்வையிட்டார்.
பின், வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகத்தில் பொது இ - சேவை மையத்தை பார்வையிட்டார்.
அங்கு பொது மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்று கலெக்டர் கலைச்செல்வியிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, சார்பு-ஆட்சியர் ஆஷிக் அலி மற்றும் கூட்டுறவுத் துறை மண்டல இணை இயக்குநர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.