/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கருவேப்பம்பூண்டி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
கருவேப்பம்பூண்டி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 10, 2025 08:26 PM
உத்திரமேரூர்:-கருவேப்பம்பூண்டி மண்ணுடையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
உத்திரமேரூர் தாலுகா, கருவேப்பம்பூண்டி கிராமத்தில் மண்ணுடையம்மன் கோவில் உள்ளது. இந்த கிராம கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள், கடந்தாண்டு ஜூன் மாதம் முடிவு செய்து புனரமைப்பு பணி மேற்கொண்டனர்.
பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மண்ணுடையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த 8ல் கணபதி பூஜையுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன.
நேற்று, காலை 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து, புனிதநீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின், அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 'பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.