/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூன்று கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
/
மூன்று கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : பிப் 11, 2025 12:34 AM

உத்திரமேரூர்உத்திரமேரூர் ஒன்றியம் வயலக்காவூர் கிராமத்தில் துலுக்காணத்தம்மன் மற்றும் கெங்கையம்மன் கோவில்கள் உள்ளது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஹோமங்கள், தத்வார்ச்சனை நடந்தது.
காலை 9:20 மணிக்கு கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதேபோல், செம்புலம் கிராமத்தில் அமைந்துள்ள சாமழகி அம்மன் கோவிலிலும், நேற்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
படப்பை
குன்றத்துார் அருகே படப்பை ஊராட்சி கீழ்படப்பை கிராமத்தில் பழமையான வீரட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நுழைவாயலில் புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் அமைத்து, கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்த 2ம் தேதி கிராம தேவை வழிபாடுடன் துவங்கியது. இதைதொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.