/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பழுதை நீக்கியது மாநகராட்சி உயர்கோபுர மின்விளக்குகள் ' பளிச்'
/
பழுதை நீக்கியது மாநகராட்சி உயர்கோபுர மின்விளக்குகள் ' பளிச்'
பழுதை நீக்கியது மாநகராட்சி உயர்கோபுர மின்விளக்குகள் ' பளிச்'
பழுதை நீக்கியது மாநகராட்சி உயர்கோபுர மின்விளக்குகள் ' பளிச்'
PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

காஞ்சிபுரம்:நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் நேதாஜி நகரில் பழுதடைந்திருந்த உயர்கோபுர மின்விளக்கை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்ததால், தற்போது, அது 'பளிச்' என, ஒளிர்கிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, நேதாஜி நகர் மும்முனை சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து ஒளிராமல் இருந்தது.
இதனால், அப்பகுதி இருளில் மூழ்கி இருந்ததால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வந்தனர். மேலும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் நிலைமை உருவானது.
பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், உயர்கோபுர மின்விளக்கின் பழுது நீக்கப்பட்டு, தற்போது அது, 'பளிச்' என ஒளிர்கிறது.