/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காஞ்சியில் 25ம் தேதிக்கு மாற்றம்
/
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காஞ்சியில் 25ம் தேதிக்கு மாற்றம்
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காஞ்சியில் 25ம் தேதிக்கு மாற்றம்
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காஞ்சியில் 25ம் தேதிக்கு மாற்றம்
ADDED : அக் 17, 2024 10:10 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாதந்தோறும் நடக்கிறது.
இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான கூட்டம், 18ம் தேதி நடக்கும் என, முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால், இக்கூட்டம் இன்று நடைபெறாது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக, வரும் 25ம் தேதி, மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெறும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
வேளாண், தோட்டக்கலை, வருவாய், கூட்டுறவு, மின்வாரியம் என அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இக்கூட்டத்தில், விவசாயிகள் நேரடியாக தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.