/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'லீக்' முறை கிரிக்கெட் தொடர் வரும் 23ல் இறுதி போட்டி
/
'லீக்' முறை கிரிக்கெட் தொடர் வரும் 23ல் இறுதி போட்டி
'லீக்' முறை கிரிக்கெட் தொடர் வரும் 23ல் இறுதி போட்டி
'லீக்' முறை கிரிக்கெட் தொடர் வரும் 23ல் இறுதி போட்டி
ADDED : மார் 10, 2024 01:03 AM
காஞ்சிபுரம்:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜி.ஆர்.டி.,கல்லுாரி மைதானத்தில், ஜி.கே.,கிரிக்கெட் அகாடமி சார்பில், லீக் முறையிலான, 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் தொடர் கடந்த ஜனவரியில்துவங்கி நடந்து வருகிறது. இதில் திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 12 அணிகள் பங்கேற்றன.
இத்தொடரில், காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணியினர் காலிறுதி, அரையிறுதியில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். மற்றொரு அரையிறுதி போட்டி வரும் 23ல் காலை நடக்கிறது.
இதில், ஸ்ரீபெரும்புதுார் அணியும், திருத்தணி அணியும் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணி, அன்று மாலை நடக்கும் இறுதி போட்டியில், காஞ்சிபுரம் அணியுடன் மோத உள்ளது.