/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருப்பருத்திகுன்றத்தில் பணி முடிந்தும் மூடி கிடக்கும் உடற்பயிற்சி கூடம்
/
திருப்பருத்திகுன்றத்தில் பணி முடிந்தும் மூடி கிடக்கும் உடற்பயிற்சி கூடம்
திருப்பருத்திகுன்றத்தில் பணி முடிந்தும் மூடி கிடக்கும் உடற்பயிற்சி கூடம்
திருப்பருத்திகுன்றத்தில் பணி முடிந்தும் மூடி கிடக்கும் உடற்பயிற்சி கூடம்
ADDED : ஆக 28, 2025 01:41 AM

திருப்பருத்திகுன்றம்:திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில், 17.66 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் கட்டுமானப் பணி முடிந்து, மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு திறக்காமல் மூடியே கிடக்கிறது.
காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில், உடற்பயிற்சி கூடம் கட்ட வேண்டும் என, ஊராட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், புதிதாக உடற்பயிற்சி கூடம் கட்டுவதற்கு சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 17 லட்சத்து, 76,000 ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
இந்நிதியில், ஊராட்சி அலுவலகம் அருகில், புதிதாக உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணி முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் உடற்பயிற்சி கூடம், பயன்பாட்டிற்கு திறக்காமல் மூடியே கிடக்கிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் கூறியதாவது:
திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில் உடற்பயிற்சி கூடம் கட்டுமானப் பணி நிறைவு பெற்றுள்ளது. இதில், உடற்பயிற்சி சாதனங்கள் வாங்கப்பட்டு, அவை பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
இப்பணிகள் முடிந்தவுடன், உடற்பயிற்சி கூடம் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

