/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சப்த கன்னிகள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
சப்த கன்னிகள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 07, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்வேலி:வாலாஜாபாத் ஒன்றியம், நெல்வேலி கிராமத்தில் அமைந்துள்ள சப்தகன்னிகள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியம் நெல்வேலி கிராமத்தில் உள்ள சப்தகன்னிகள் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று, காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜையை தொடர்ந்து, புனிதநீர் கலசம் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். பின், பாலாபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. விழாவில், நெல்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

