/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரும் 2ல் கும்பாபிஷேகம் கணபதி பூஜையுடன் துவக்கம்
/
வரும் 2ல் கும்பாபிஷேகம் கணபதி பூஜையுடன் துவக்கம்
ADDED : ஜன 28, 2025 07:45 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாதில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. பல லட்சம் ரூபாய் செலவில், புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்று, பிப்., 2ல் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி, இன்று காலை கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்க உள்ளது. நாளை பாலாற்றில் இருந்து புனித நீரை எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் காலை அக்னி ஸ்ங்க்ரஹனம், மாலை 4:30 மணிக்கு முதல் கால பூஜை நடக்கிறது.
வரும் 2ம் தேதி காலை 9:30 மணி முதல் 10:00 மணிக்குள் கோவில் கோபுர விமானத்திற்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

