/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பள்ளி கட்டட பணி பார்வையிட்ட எம்.எல்.ஏ.,
/
அரசு பள்ளி கட்டட பணி பார்வையிட்ட எம்.எல்.ஏ.,
ADDED : ஆக 22, 2024 01:03 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 1,150 மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.
இப்பள்ளிக்கு போதுமான கட்டட வசதி இல்லாததால், இடநெருக்கடியில் மாணவ - மாணவியர் பயின்று வந்தனர். இதை தொடர்ந்து, பள்ளிக்கு கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
அதன்படி, சாலவாக்கம் அரசு மேல்நிலை பள்ளிக்கு, இரண்டு வகுப்பறை, நான்கு ஆய்வகம், இரண்டு கழிப்பறை என, எட்டு அறைகள் கொண்ட இரண்டு அடுக்குமாடி கட்டடம் கட்ட நபார்டு திட்டத்தின் கீழ், 4.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணி கடந்த பிப்ரவரியில் துவங்கி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பணியின் தரம் குறித்து உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்கிருந்த பொறியாளர் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் பணிகளின் விபரம் குறித்து கேட்டறிந்தார். கட்டடத்தை தரமான முறையில் கட்டவும், பருவமழைக்குள் பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.