/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் பணிக்கு இடையூறாக மின்கம்பம் முட்டு கொடுத்து நெ.சா.துறையினர் புதுயுக்தி
/
கால்வாய் பணிக்கு இடையூறாக மின்கம்பம் முட்டு கொடுத்து நெ.சா.துறையினர் புதுயுக்தி
கால்வாய் பணிக்கு இடையூறாக மின்கம்பம் முட்டு கொடுத்து நெ.சா.துறையினர் புதுயுக்தி
கால்வாய் பணிக்கு இடையூறாக மின்கம்பம் முட்டு கொடுத்து நெ.சா.துறையினர் புதுயுக்தி
ADDED : டிச 28, 2024 01:33 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் மின் கம்பங்களை அகற்றாமல், மந்தகதியில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளால், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என, அனைத்து தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 6.09 கோடி ரூபாய் மதிப்பில், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் முதல், ஜெயா மருத்துவமனை வரை, சாலையின் இருபுறமும் 2.2 கி.மீ.,க்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலையோரங்களில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்காமல், மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது. இதனால், மின்கம்பங்கம் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
காந்தி சாலையில் அரைகுறையாக விடப்பட்டுள்ள வடிகால் நடுவே உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளதால், அவை கீழே விழாமல் இருக்க, நெடுஞ்சாலை துறையினர் கட்டைகளை வைத்து மின் கம்பத்தில் முட்டு கொடுத்துள்ளனர்.
மேலும், மந்தகதியில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணியால், 'பீக் ஹவர்' நேரங்களில், காந்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, மின்கம்பங்களை மாற்றி அமைத்து, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.