/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்வி திட்டப் பணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும்...சரிவு: 'சமக்ர சிக் ஷா' திட்டத்தில் நிதி வெகுவாக குறைப்பு
/
கல்வி திட்டப் பணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும்...சரிவு: 'சமக்ர சிக் ஷா' திட்டத்தில் நிதி வெகுவாக குறைப்பு
கல்வி திட்டப் பணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும்...சரிவு: 'சமக்ர சிக் ஷா' திட்டத்தில் நிதி வெகுவாக குறைப்பு
கல்வி திட்டப் பணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும்...சரிவு: 'சமக்ர சிக் ஷா' திட்டத்தில் நிதி வெகுவாக குறைப்பு
ADDED : மே 14, 2025 09:21 PM
காஞ்சிபுரம்:ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டப் பணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளன. அதற்கேற்ப நிதியும் குறைக்கப்பட்டுள்ளது என, கல்வி துறையினர் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டாரங்களில், அரசு மற்றும் அரசு நிதிநாடும் பள்ளிகள் என, 654 பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் ராஷ்டிரிய மத்திய இடை நிலை கல்வி இயக்கம் என, இரு திட்டங்கள் இணைந்து சமக்ர சிக் ஷா என, அழைக்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புதிய பள்ளி துவக்குதல், பள்ளிக்கு செல்லா குழந்தைகளை மீட்டெடுத்து பள்ளிக்கு மீண்டும் பள்ளிக்கு அனுப்புதல், பெண் கல்வியில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட 25 விதமான பணிகளை திட்ட அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த திட்டங்களுக்கு ஆண்டுதோறும் கணிசமான தொகை ஒதுக்கீடு செய்கின்றனர். இந்த ஒதுக்கீடு நிதி வாயிலாக, விலையில்லாத பாடநுால் வழங்குதல், பள்ளி மேலாண் குழு ஏற்படுத்துதல், சிறப்பு பயிற்சி அளித்தல், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2021 - 22ம் துவக்க நிதி ஆண்டில், 25 விதமான பணி திட்டங்களை செயல்படுத்தி வந்தனர். கடந்த நிதி ஆண்டில், விலையில்லாத பாடநுால் வழங்குது தவிர்ப்பு, சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கை கட்டணம் செலுத்துவது, சீருடை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறைக்கப்பட்டு, 14 பணிகளின் திட்டங்களின் எண்ணிக்கையாக செயல்படுத்தப்படுகின்றன. அதற்கு ஏற்ப நிதிகளின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளன.
உதாரணமாக, கடந்த 2021- - 22ம் நிதி ஆண்டில், 6.30 லட்சம் திட்ட பணிகளுக்கு 74.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அடுத்த நிதி ஆண்டு, திட்ட பணிகளின் எண்ணிக்கை மற்றும் நிதியும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024- - 25ம் நிதி ஆண்டில், 11,017 திட்ட பணிகளுக்கு 12.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது, ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் திட்ட பணிகள் எண்ணிக்கை மற்றும் செலவின நிதிகளும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், மாணவ- - மாணவியரின் திறன்களை மேம்படுத்தும் சில திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாக புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கல்வித் துறைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிய கட்டடம் கட்டுவது, சீருடை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு, முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதில், பள்ளிக்கு செல்லாத குழந்தைகள், மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் மேம்பாடு என, முக்கியமான திட்ட பணிகளை மட்டுமே தேர்வு செய்து, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பூர்த்தி செய்யப்படுகிறது. கட்டடம் கட்டுவது பொதுப்பணித் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, பாடநுால்கள் வழங்குவது, சீருடை வழங்குவது பள்ளி கல்வித் துறையினருக்கும் என, பல்வேறு துறையினருக்கு திட்டப்பணிகளின் எண்ணிக்கை பிரித்தளிக்கப்பட்டுள்ளன.வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.