/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடையாளம் தெரியாமல் சீரழிந்த பழையசீவரம் கோவில் மண்டபம்
/
அடையாளம் தெரியாமல் சீரழிந்த பழையசீவரம் கோவில் மண்டபம்
அடையாளம் தெரியாமல் சீரழிந்த பழையசீவரம் கோவில் மண்டபம்
அடையாளம் தெரியாமல் சீரழிந்த பழையசீவரம் கோவில் மண்டபம்
ADDED : டிச 11, 2024 11:18 PM

வாலாஜாபாத்:காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் அடுத்து பழையசீவரம் கிராமம் உள்ளது. இப்பகுதியில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில், ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் தினத்தன்று, பார்வேட்டை விழா கோலாகலமாக நடக்கும். அப்போது, காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் ஊர்வலமாக வந்து ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியோடு சந்தித்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
வரதராஜ பெருமாள், மலைக் கோவிலுக்கு வருவதற்கு முன்னதாக, மலையடிவாரத்தில் உள்ள தனி மண்டபத்தில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.
அப்போது, அங்கு சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
மலையடிவாரத்தில் உள்ள இந்த மண்டபம், கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து, மண்டப கட்டட பகுதியும் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது.
மேலும், மண்டபத்தைச் சுற்றிலும் புதர் மண்டி காட்சி அளிக்கிறது.
இதனால், கடந்த சில ஆண்டுகளாக தனி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறாமல், நேரடியாக கோவிலுக்கு சுவாமி சென்றடையும் நிலை உள்ளது.
எனவே, பழையசீவரம், மலைக்கோவிலையொட்டி, மலையடிவாரத்தில் உள்ள மண்டபத்தை புணரமைத்து, மண்டபத்தை சுற்றி சூழ்ந்துள்ள முட்புதரை அகற்றி, வழிபாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி வாசிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

